Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

BIG BREAKING : தமிழகத்தில் 38 பேருக்கு கொரோனா – மாநில சுகாதாரத்துறை ….!!

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை மேலும் 3 அதிகரித்து 38ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் அதன் தாக்கத்தை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டதில் மதுரையை சேர்ந்தவர் உயிரிழந்துள்ளார். காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர் குணமாகி விட்டதாக தமிழக அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இதுவரை கொரோனா வைரசால் 35 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை ட்விட்டர் மூலம் தகவல் தெரிவித்துள்ளது.சென்னையை சேர்ந்த 73 வயது மூதாட்டி, 39 வயது ஆண், சேலத்தில் 61 வயது முதியவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38ஆக உயர்ந்துள்ளது.

இதில் 61 வயது முதியவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை அண்ணாநகரை சேர்ந்த 39 வயது நபர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 73 வயது மூதாட்டிக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |