சென்னை அருகே கும்மிடிப்பூண்டியில் உள்ள எண்ணெய் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அருகே உள்ள கும்மிடிப்பூண்டி யில் உள்ள எண்ணெய் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. நான்குமணி நேரமாக தீ பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.தீயை அணைப்பதற்கு கடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை அணைப்பதற்கு போராடி வருகின்றனர்.
தொடர்ந்து எரிந்து வரும் தீயை அணைப்பதற்கு வீரர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். மிக பயங்கரமாக தீ கொழுந்து விட்டு எரிவதால் கரும்புகை சூழ்ந்தது அந்த பகுதியில் காணப்படுகிறது. அங்கு இருக்கக்கூடிய 1 லட்சம் லிட்டர் என்னை பர்லர்கள் ஒவ்வொன்றாக வெடித்து சிதறி எரிந்து கொண்டிருக்கிறது என்று தீயணைப்புதுறையினர் தெரிவித்தனர். இதனால் அங்கு இருக்கக்கூடிய மக்களுக்கு கண் எரிச்சல் ஏற்ப்பட்டுள்ளது.