Categories
உலக செய்திகள்

ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த பிரதமர் மோடியின் முடிவுக்கு ஐநா சபை வரவேற்பு!

ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த பிரதமர் மோடியின் முடிவுக்கு ஐநா சபை வரவேற்பு தெரிவித்துள்ளது. கொரோனாவை தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவோம் ஐ.நா. அறிவித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் 190க்கும் மேற்பட்ட நாடுகளில் பதிப்பை ஏற்படுத்தி கதிகலங்க வைத்து வருகிறது.

கடந்த சில வாரங்களாக இந்தியாவிலும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 724 ஆக உயர்ந்துள்ளது. இதில் கேரளா , மகாராஷ்டிராவில் அதிக பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பணிகளை தவிர்த்து மக்கள் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் ரயில், விமானம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கைக் குஐநா சபை வரவேற்பு தெரிவித்துள்ளது.

Categories

Tech |