மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் வைரஸ் தோற்று குறித்த விவரம் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் அம்மாநிலத்தில் கோவிட் – 19 வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 135 ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்திருந்தது. அதில் இந்தியர்கள் 677 பேரும், வெளிநாட்டவர் 47 பேரும் அடங்குவர். இதுவரை இந்தியாவில் குணமடைத்தவர்கள் எண்ணிக்கை 67 ஆக இருந்தது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக கேரளாவில் 137, மகாராஷ்டிராவில் 130 பேரும் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், மகாராஷ்டிராவில் மேலும் 5 பேருக்கு தொற்று நோய் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, புனேவில் கோவிட் -19 பாதிப்பு இருப்பதாக சிகிச்சை பெற்று வந்த இருவருக்கு தொற்று பாதிப்பில்லை என தெரியவந்துள்ளது. நாயுடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கும் 5 முறை கொரோனா சோதனை செய்யப்பட்டது. அனைத்திலும், கொரோனா தோற்று இல்லை என்பதை உறுதி செய்த மருத்துவர்கள் அவர்களை வீட்டிற்கு அனுப்பிவைத்தனர். தற்போது, புனேவில் தொற்று நோய் பாதிப்பு இருந்த 32 பேரில், 10 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது