Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் தினமும் 4 லட்சம் பேருக்கு உணவுகள் வழங்கப்படும்: டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக 144 தடை உத்தரவு 3 வது நாளாக நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இந்திய முழுவதும் ஆள்நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. ஐடி ஊழியர்கள் அனைவரையும் வீட்டிலேயே வேலை பார்க்கும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது. சிறு குறு தொழில் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. காய்கறி, மருந்து, மளிகை பொருட்கள் விற்கும் கடைகளை தவிர்த்து மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவு காரணமாக டெல்லி முழுவதும் தினக்கூலி தொழிலாளர்கள், ஆதரவற்றோர், குடியிருப்பு வசதி இல்லாதவர்கள் அனைவரும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றையதினம், கொரோனா பாதிப்புகள் குறித்தும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை முடிவில், டெல்லியில் உணவு டெலிவரி வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படும், அத்தியாவசிய தேவைகளை மேற்கொள்ள மக்கள் வெளியே வர அனுமதி வழங்கப்படுமென தெரிவித்தார். இந்த நிலையில், இன்று அரவிந்த் கெஜ்ரிவால் தன் மாநில மக்களுக்கு உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது, ” மக்களுக்கு மத்திய உணவு மற்றும் இரவு உணவுகளை 325 பள்ளிகளில் வைத்து விநியோகம் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். அனைத்து பள்ளிகளிலும் சுமார் 500 பேர் என மொத்தம் 20,000 பேருக்கு உணவு வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். இன்று முதல் 2,00,000 பேருக்கு உணவு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் நாளை முதல் இதன் எண்ணிக்கை இரு மடங்காக உயர்த்தப்படும் என்றும் தினமும் 4,00,000 பேருக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதற்காக டெல்லி முழுவதும் பல்வேறு இடங்களில் மையங்கள் வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்”.

Categories

Tech |