தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் அதன் தாக்கத்தை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை ஒருவனா வைரசால் 27 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் உயர்ந்துள்ளது. முன்னதாக காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவர் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியுளார்.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மதுரையை சரிந்த நபர் உயிரிழந்துள்ள நிலையில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொரோனா உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று இன்னும் இரண்டு நாட்களில் வீடு திரும்ப உள்ளார்.இந்தநிலையில் புதிதாக இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
லண்டனில் இருந்து சென்னை வந்த 24 வயது இளைஞருக்கும் , 65 வயது பெண்னுக்கு கொரோன உறுதியானது. இருவரும் கீழ்பாக்கம் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.