சங்கரன்கோவிலில் 144 தடையை மீறி வெளியே சுற்றிய குடிமகன்களுக்கு காவல்துறையினர் நூதன முறையில் தண்டனை வழங்கினர்.
கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகளை தவிர மற்ற கடைகள் அனைத்தும் அதிரடியாக மூடப்பட்டன. இந்நிலையில் மதுபான கடைகளும் மூடப்பட்டதால் ஆங்காங்கே சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில்,
சங்கரன்கோவில் அருகே சட்டவிரோதமாக சேர்க்கப்பட்ட மதுவை குடித்து விட்டு வாலிபர்கள் சிலர் 144 தடை உத்தரவை மீறி ஊருக்குள் சுற்றித்திரிந்து உள்ளனர். இதைக்கண்ட காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து அறிவுரை செய்ததுடன் வெயில் சுட்டெரிக்கும் தார் சாலையில் தண்ணி அடிக்க மாட்டேன், வெளியே வர மாட்டேன் என கூறிக்கொண்டே அங்கப்பிரதட்சனம் செய்யுமாறு நூதன முறையில் தண்டனை வழங்கினர்.