Categories
லைப் ஸ்டைல்

ஒரே நாளில் பேன் தொல்லைகள் நீங்க.. இதை கடைபிடிங்க…!!

பெண்களுக்கு குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இருக்கும் பிரச்சனை தலையில் அதிகம் பேன்   இருப்பது அதனை இயற்கை முறையில் அகற்றும் வழியை பார்க்கலாம்.

கற்றாழை

தலைக்கு குளிப்பதற்கு முன் கற்றாழை ஜெல்லை தலையில் தடவி 15 நிமிடங்கள் ஊறவைத்து பின்னர் தலைக்கு குளித்தால் பேன் தொல்லை அறவே ஒழிந்துவிடும்.

வெள்ளைப் பூண்டு

பூண்டில் இருக்கும் மனம் பேனை விரட்டும் தன்மை கொண்டது. 8 பூண்டு பல்லை எடுத்து நன்றாக அரைத்து அதனுடன் எலுமிச்சை சாறையும் சிறிதளவு சேர்த்து தலையில் தடவி அரை மணி நேரம் ஊற வைத்த பின்னர் தலைக்கு குளித்தால் பேன் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

வினிகர்

இரவு வினிகரை தலையில் தேய்த்து ஒரு துண்டால் தலையில் கட்டி கொண்டு காலையில் ஷாம்பு போட்டு குளித்தால் பெண் காணாமல் போய்விடும்.

உப்பு

வினிகருடன் சிறிது உப்பு சேர்த்து தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்த பின்னர் ஷாம்பு போட்டு குளித்தால் பேன் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

வெந்தயம்

ஒரு கைப்பிடி வெந்தயத்தை இரவு தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் நன்றாக அரைத்து தலையில் தேய்த்து அரைமணி நேரம் கழித்து குளித்து வந்தால் பேன் தொல்லையில் இருந்து விடுபட முடியும்.

வேப்பெண்ணெய்

வேப்ப எண்ணையை தலையில் தேய்த்து குளித்துவந்தால் பேன் தொல்லைகள் குறையும் வேப்பெண்ணெய் கிடைக்காவிட்டால் வேப்பிலையை அரைத்து தலையில் தேய்த்து குளித்தாலும் நல்ல பலனே கிடைக்கும்.

வெங்காயம்

ஐந்து வெங்காயத்தை எடுத்து அரைத்து சாறு எடுத்துக் கொண்டு அதனை தலையில் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் ஷாம்பு போட்டு குளித்தால் பேன் தொல்லைகள் தீரும்.

Categories

Tech |