உங்கள் குடும்பத்தில் ஒருவனாக பேசுகிறேன், கொரோனாவை விரட்டியடிக்க உறுதி ஏற்போம் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழக மக்களிடம் முதல்வர் பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, கொரோனாவுக்கு எதிராக போராட விழித்திரு… விலகியிரு… வீட்டிலிரு… தமிழக முதலமைச்சராக இல்லாமல், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக பேசுகிறேன். கொரோனாவுக்கு எதிராக போராடி தமிழகத்தையும் தமிழக மக்களையும் பாதுகாக்க உறுதியேற்போம்.
மேலும் “பொறுப்பான குடிமகனை இருந்து நம்மையும், சமூகத்தையும் பாதுகாப்போம். 21 நாள் ஊரடங்கு என்பது விடுமுறை அல்ல; உங்கள் குடும்பத்தை பாதுகாக்கும் அரசின் உத்தரவு. கொரோனாவை விரட்டியடிக்க உறுதி ஏற்போம். அரிசி, பால், காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.