Categories
மாநில செய்திகள்

இந்திய நிதிநிலையை என்றும் காத்தவன் சிறுதொழில் செய்பவனே… கமலஹாசன் ட்வீட்!

கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக இருந்தது. இதற்கிடையே நேற்று நள்ளிரவு தமிழகத்தில் ஒருவர் கொரோனாவுக்கு உயிரிழந்தார்.

இந்நிலையில் நேற்று மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பித்து உத்தரவிட்டார். இதற்கு மக்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார். இப்போதைக்கு மனித இனத்திற்கு இருக்கும் ஒரே வழி மனிதர்கள் அனைவரையும் வீட்டுக்குள் முடக்கி வைப்பது ஒன்றுதானே தவிர வேறு வழியில்லை என்று அனைத்து நாடுகளின் அரசுகளும் இதை கடைபிடித்து வருகிறது.

மேலும் இந்த 21 நாட்கள் அனைவரும் வீட்டுக்குள் இருக்கவில்லை என்றால் நாடு 21 வருடங்கள் பின்னோக்கி செல்லும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். நேற்று நள்ளிரவு முதல் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இந்நிலையில் இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.

அதில் உயிர் காக்க 21 நாட்கள் உள்ளிருக்க சொல்லும் நேரத்தில், அணிசேரா தொழிலாளர்கள் எங்ஙனம் பசியாறுவர் என்பதையும் கவனத்தில் கொள்க. பெருமுதலாளிகளுக்கு மட்டும் உதவும் நேரம் இதுவல்ல. இந்திய நிதிநிலையை என்றும் காத்தவன் சிறுதொழில் செய்பவனே. அவனை உதாசீனித்தவர் பதவி இழப்பர். இது சரித்திரம் என குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |