இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் 20 பேருக்கு மேல் கூடகூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தீயாக பரவி வருகின்றது. இதுவரையில் 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், 10 பேர் உயிரிழந்த நிலையில் நாட்டு மக்களிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து 2 ஆவது முறையாக பிரதமர் மோடி பேசினார்.அதில், அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்படும்.
மேலும் உறவினர்கள், வெளியாட்கள் உட்பட யாரையும் வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம் 21 நாட்களை ஆக்கப்பூர்வமாக மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். உங்கள் வீட்டிலிருந்து நீங்கள் வெளியே சென்றால் கொரோனா உங்கள் வீட்டில் அடியெடுத்து வைக்கும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வெளியிட்டது. அதில், இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் 20 பேருக்கு மேல் கூடகூடாது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் இருந்தாலும், அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.