கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பிரதமர் மோடி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அறிவித்ததையடுத்து ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நாட்டு மக்களிடையே கொரோனா இரண்டாவது முறையாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தார். கொரோனாவை விளையாட்டாக நினைக்காதீர்கள், ஒவ்வொரு தனிமனிதனுக்கும் பொறுப்பு இருக்கிறது. யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று மோடி அறிவித்திருந்தார்.
மேலும் அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும் பிரதமர் மோடி தெரிவித்திருந்த நிலையில் தற்போது 12 மணி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. கொரோனா பரவுவதை தடுக்க அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். இதனால் ஒவ்வொரு மாநிலமும், ஒவ்வொரு நகரமும், ஒரு கிராமமும் முழுமையாக அடைக்கப்படும்.