தமிழக சட்டப்பேரவை இன்று கூடிய நிலையில் கொரோனா வைரஸ் நடவடிக்கை குறித்து விளக்கம் அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் கொரோனா மின்னல் வேகத்தில் பரவுகிறது. சமூகத்தொற்றாக மாறி பரவுவதால் அதனை தடுக்க அரசு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார். பயணங்களை தவிர்த்தாலே நோய் பரவுதலின் வேகம் குறையும்.
தயவு செய்து பயணங்களை தவிருங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர், அரசு சொல்வதை மக்கள் உறுதியாக கேட்க வேண்டும், அரசு உத்தரவின் படி பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என கூறியுள்ளார். கொரோனா பாதிக்கப்பட்ட மதுரையை சேர்ந்த நோயாளியின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டும். கொரோனா வேகமாக பரவுவதால் மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம். மக்கள் உயிரை காப்பதே அரசின் நோக்கம், கொரோனோவை ஒழிக்க மக்களின் ஒத்துழைப்பை அரசு எதிர்பார்க்கிறது என தெரிவித்துளளார்.
மேலும் கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க தனி மருத்துவமனை நாளைக்குள் தயாராகி வருவதாகவும்ம் சென்னையில் உள்ள பல்துறை சிறப்பு மருத்துவமனையில் 350 படுக்கை வசதிகளுடன் கோரோனோ வார்டு நாளைக்குள் தயார் நிலையில் இருக்கும் என அவர் தெரித்துள்ளார்.