Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

15KG அரிசி, 1KG பருப்பு, 1LIT எண்ணெய்… பிற மாநிலத்தவருக்கு கைகொடுக்கும் தமிழகம் …!!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக முதல்வர் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தார்.

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதி காலை வரை தொடரும் இந்த தடை உத்தரவால் முற்றிலும் பாதிக்கப்படும் தினக்கூலியை சேர்ந்தவர்கள் , அமைப்புசாரா தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் குறித்த கேள்விகள்  பல எழுந்தனர்.

இந்த நிலையில் தமிழக முதல்வர் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் பல்வேறு நிவாரண அறிவிப்புகளை மேற்கொள்ள 60 , 500 கோடிகளை ஒத்துக்கி இருந்த முதல்வர் மொத்தமாக 3250 கோடியை ஒத்தியுள்ளதாக தெரிவித்தார்.  மேலும் 110 விதியின் கீழ் பல்வேறு நிவாரண திட்டங்களை அறிவித்தார்.

அதில் தமிழகத்தில் சிக்கி தவிக்கும் பிற மாநிலத்தை சேர்ந்த கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் தொழிலாளர் வாரியங்கள் அடையாளங்கண்டு குடும்பம் ஒன்றுக்கு 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு , சமையல் எண்ணெய் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்பு மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ளது.

Categories

Tech |