திருச்சி : திருச்சியில் 4 பேருக்கு கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் 11 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் கொரோனவை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது.
இன்று மாலை 6 மணி முதல் மார்ச் 31ம் தேதி வரை தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், மதுரையை சேர்ந்த 54 வயது நபருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
தமிழகத்திற்குள்ளேயே இருந்து கொரோனா பரவிய முதல் நபர் இவர் என்றும் இவருக்கு எந்த வெளிநாட்டு தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் திருச்சியில் 4 பேருக்கு கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல ஈரோட்டில் சொந்த ஊர் சென்று வந்த 13 வட மாநில தொழிலாளர்களுக்கு சளி, காய்ச்சலால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அவர்கள் தனிமை படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிகிறது. இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.