Categories
மாநில செய்திகள்

ரூ.3,250,00,00,000 ஒதுக்கீடு…. தமிழக மக்களுக்காக பல்வேறு அறிவிப்பு ….!!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக முதலவர் நிவாரணம் அறிவிப்பைவெளியிட்டுள்ளார்.

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதி காலை வரை தொடரும் இந்த தடை உத்தரவால் முற்றிலும் பாதிக்கப்படும் தினக்கூலியை சேர்ந்தவர்கள் , அமைப்புசாரா தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் குறித்த கேள்விகள்  பல எழுந்தனர்.

இந்த நிலையில் தமிழக முதல்வர் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் பல்வேறு நிவாரண அறிவிப்புகளை மேற்கொள்ள 60 , 500 கோடிகளை ஒத்துக்கி இருந்த முதல்வர் மொத்தமாக 3250 கோடியை ஒத்தியுள்ளதாக தெரிவித்தார்.  மேலும் 110 விதியின் கீழ் பல்வேறு நிவாரண திட்டங்களை அறிவித்தார்.

முதல்வர் பழனிசாமிக்கான பட முடிவுகள்

அதில் ,

அனைத்து குடும்ப அட்டைதரர்களுக்கு   ரூபாய் 100 நிவாரணம் வழங்கப்படும் .

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை விலை இன்றி வழங்கப்படும் .

பொதுவினியோக கடைகளில் கூட்டத்தை தவிர்க்க நிவாரணம் டோக்கன் முறையில் வழங்கப்படும்

குடும்ப அட்டைதாரர்கள் மார்ச் மாத பொருட்களை வாங்க தவறினால் ஏப்ரல் மாதத்தில் சேர்த்து வாங்கிக் கொள்ளலாம்.

கட்டடத் தொழிலாளர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் நல வாரியத்தின் சிறப்பு தொகுப்பு தொகுப்பாக ஆயிரம் ரூபாயும், அவர்களுக்கு  17 கிலோ அரிசி , ஒரு கிலோ பருப்பு , சமையல் எண்ணெய்  வழங்கப்படும்.

தமிழகத்தில் சிக்கி தவிக்கும் பிற மாநிலத்தை சேர்ந்த கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் தொழிலாளர் வாரியங்கள் அடையாளங்கண்டு குடும்பம் ஒன்றுக்கு 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு ,  சமையல் எண்ணெய் இலவசமாக வழங்கப்படும்.

எந்த வசதியும் இல்லாத ஆதரவற்றோர் போன்றவர்கள் இருக்கும் இடங்களில் சூடான சுகாதார முறையில் உணவு தயாரித்து வழங்கப்படும். இதற்கென தேவைக்கேற்ப பொது சமையல் கூடங்கள் அமைக்கப்படும்.

பதிவுசெய்யப்பட்ட நடைபாதை வியாபாரிகளுக்கு பொதுவினியோக திட்டத்தில் வழங்கப்படும் ஆயிரம் ரூபாயுடன் கூடுதலாக ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை வழங்கப்படும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு இரண்டு நாட்களாக ஊதியம் சிறப்பு ஊதியம் ஆக கூடுதலாக வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்தார்.

Categories

Tech |