Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி : 3000 கைதிகளை விடுவிக்கும் திஹார் …..!!

கொரோனா வைரஸ் தாக்கத்தை தொடர்ந்து சிறைக்கைதிகளை விடுவிக்க திஹார் சிறை நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் சிறைக்கைதிகளுக்கு பரவுவதை தடுக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைதிகளுக்கு பரோல் வழங்குவது குறித்து மாநில அரசு முடிவு எடுக்கலாம் என்று அறிவுறுத்தியது. மேலும் மாநில சட்ட ஆணையத்தின் தலைவர் தலைமையில் குழு ஒன்றை அமைத்து இது குறித்து முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள்  தெரிவித்தனர்.

இதோடு சிறைச்சாலைகளில் கைதிகளின் நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்திய உச்ச நீதிமன்றம், சிறைக்கைதிகளின் நன்னடத்தை அடிப்படையில் பரோல், இடைக்கால ஜாமீன் வழங்கி கைதிகளை விடுவிக்கவும் அனுமதி வழங்கி இருந்தது.

உச்சநீதிமன்றத்தின் அறிவுறுதலையடுத்து  அடுத்த 3-4 நாட்களில் சுமார் 3000 கைதிகளை விடுவிப்பது என்று திஹார் சிறை நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.இவர்களில் 1500 குற்றவாளிகள் பரோலில் விடுவிக்கப்படுவார்கள் மற்றும் பிற 1500 கைதிகள் இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்படுவார்கள் என்றும் திஹார் தெரிவித்துள்ளது.

Categories

Tech |