ஸ்பெயின் நாட்டின் துணை பிரதமர் சுவாச நோய்த்தொற்றுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஸ்பெயினில் மார்ச் 22ஆம் தேதி நிலவரப்படி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 572 லிருந்து 33 ஆயிரத்து 89 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 2,182 ஆக உயர்ந்திருக்கிறது. முக்கியமான ஒரே நாள் இரவில் 462 பேர் பலியாகியுள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தான் ஸ்பெயினின் துணை பிரதமர் கார்மென் கால்வோ (Carmen Calvo) சுவாச நோய்த்தொற்றுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இருப்பதாக அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 62 வயதான கார்மெனுக்கு தற்போது பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விரைவில் சோதனை முடிவுகள் வெளியிடப்படும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.