Categories
கோயம்புத்தூர் சற்றுமுன் திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனா எதிரொலி : நெல்லை, கோவை முடக்கம் ? மாலை முதல்வர் அறிவிக்கிறார் …!!

திருநெல்வேலி , கோவை மாவட்டமும் முடக்கப்பட்ட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மாநில தலைமைச் செயலாளருடன்  மத்திய அரசு அதிகாரிகள் நேற்று ஆலோசித்தனர். அதில் கொரோனா வைரஸ் பாதித்த மாவட்டங்களை தனிமைப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள 80 மாவட்டங்களை முழுமையாக தனிமைப்படுத்த வேண்டும் என்ற பரிந்துரையை பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கினர்.

இதில் தமிழகத்தை பொறுத்தவரை சென்னை ,காஞ்சிபுரம் , ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு பரிந்துரை செய்தது. மேலும் மத்திய அரசின் பரிந்துரை மீது தமிழக அரசுதான் இறுதி முடிவு எடுத்து அறிவிக்கும் என்று சொல்லப்பட்ட்டநிலையில் இன்று மாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனிமை படுத்தப்பட்ட மாவட்டங்களை அறிவிக்க இருக்கின்றார்.

இது தொடர்பாக இன்று காலை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இதில் கூடுதலாக கோவை மற்றும் நெல்லை ஆகிய இரு மாவட்டமும் இணைக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாவட்டம் முடக்கப்படும் என்பதால் பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம். உங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களுக்கு எந்த தட்டுப்படும் வராது. தமிழக அரசு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய கூடுதலாக 500  கோடி ஒதுக்கீடு செய்து சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதில் நெல்லை மருத்துவமனையில் கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |