தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக கூடுதலாக ரூ.500 கோடி நிதி ஒதுக்கி உத்தராவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படுகின்றது. ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் பேருந்து சேவைகள் தடை செய்யப்பட்டுள்ளன. பெரிய பெரிய கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஏற்கனவே 60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது.
மேலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் தமிழகத்திற்கு 987 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்தார். இந்நிலையில் சட்டசபையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள கூடுதலாக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.