Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : சட்டப்பேரவை கூட்டத்தொடர் – திமுக, காங்., புறக்கணிப்பு ….!!

சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணிக்க போவதாக திமுக , காங். அறிவித்துள்ளது.

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கையை மேற்கொண்டு வருகின்றது. இந்திய நாடு முழுவதும் 390 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏழு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. மார்ச் 31 வரை பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு தடுப்பு நடவடிக்கைகளையாக அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் சட்டமன்றத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று எதிர்கட்சியான திமுக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

ஆனால் ஏப்ரல் முதல்வாரம் வரை நடைபெற இருந்த சட்டமன்ற கூட்டத்தொடரை இந்த மாதம் இறுதி வரை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்ட உத்தரவை சபாநாயகர் அறிவித்தார். ஆனாலும் திமுக சட்டமன்றத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று சொல்லி வந்த நிலையில் தற்போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடப்பு சட்டப்பேரவையை புறக்கணிப்பதாக  திமுக, காங்கிரஸ், இந்திய முஸ்லிம் லீக் கட்சி முடிவு செய்துள்ளது. இதனை திமுக கொறடா சக்கரபாணி அறிவித்துள்ளார்.

Categories

Tech |