Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எதையும், யாரையும் பொறுத்தப்படுத்தாத புள்ளிங்கோஸ்… சாகசம் என்று செய்த சேட்டைகள்..!!

சென்னையில் புள்ளிங்கோக்கல் எதையும் பொருட்படத்தாமல் கொரோனா பற்றிய ஆபத்து அறியாமல், நேற்று அசாகசம் என்று அடாவடியில் இறங்கியுள்ளனர்.

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸை இந்தியாவில் பரவாமல் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனோவை  கட்டுப்படுத்த பிரதமர் மோடி ஞாயிறு ஒரு நாள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் மக்கள் சுய ஊரடங்கு கடைபிடிக்க வேண்டுகோள் விடுத்தார்.

அதனை நாடு முழுவதும் மக்கள் கட்டுப்பாட்டுடன் நிறைவேற்றி  வந்த வேலையில்தான் தெருக்களில் முக்கிய சாலைகளில் இறங்கி அடாவடி செய்துள்ளனர், இந்த விஷமப் புள்ளிங்கோக்கள். தெருக்களில் முக்கிய சாலைகளில் ஆள் நடமாட்டமே இல்லாத நிலையில் எந்தவித அசம்பாவிதமும்  நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களுக்கு, கொரோனா குறித்த விபரீதம் புரியாமல் சாலையில் சாகசம் செய்த இந்தப் புள்ளிங்கோக்களை  கட்டுப்படுத்துவதே பெரும் வேலையாக மாறிப்போனது.

ஒருபுறம் சிறுவர்கள் விபரீதம் தெரியாமல் விளையாடுகிறார்கள் என்றால் மறுபுறம் இளைஞர்கள் சாலை நடுவே பைக்கை நிறுத்தி வரலாற்று சிறப்புமிக்க செல்பி எடுப்பதாக நினைத்து அத்தியாவசிய தேவைக்காக சாலையில் வேகமாக செல்வோருக்கு வழிவிடமால் இடைஞ்சலை ஏற்படுத்தினர். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள விடுமுறை கோடை விடுமுறையோ, பண்டிகை விடுமுறையோ  இல்லை என்பதை உணர்ந்து கொண்டு, நோய் பரவாமல் கட்டுப்படுத்த அரசுக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உதவ வேண்டும். இல்லையேல் அரசு எடுக்கும் முயற்சிகள் பலன் தராது என்பதே நிதர்சனம்.

Categories

Tech |