Categories
தேசிய செய்திகள்

யப்பா…. என்னா அடி…, கொரோனா மீது கோபம்….. கொந்தளித்த பாட்டி …..!!

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்ற பொதுமக்கள் இன்று மாலை வீடுகளின் வெளியே வந்து கைதட்டி நன்றி செலுத்தினர்.

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை  மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தடுக்கும் வகையில் இன்று சுய ஊரடங்கை கடைபிடிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார். இதனால் இன்று நாடு முழுவதும் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு இந்திய நாடே முடங்கியது. அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

மேலும் மாலை 5 மணிக்கு அனைவரும் வீட்டு வாசலில் வந்து வைரஸை எதிர்த்துப் போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள் , மருத்துவ ஊழியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் கைதட்டி, மணி அடிக்கவும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

மோடியின் இந்த உத்தரவை நாடு முழுவதும் உள்ள மக்கள் ஆதரித்து பின்பற்றினர். மாலை 5 மணி ஆனதும் அந்தந்த மாநில முதல்வராக இருந்தாலும், பொதுமக்களாக இருந்தாலும் அனைவரும் வீட்டிலிருந்தபடி கைதட்டி, மணியடித்து மருத்துவர்களுக்கு , ஊழியர்களுக்கு நன்றி செலுத்தினர்.

இதையடுத்து தற்போது ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. வயதான மூதாட்டி தான்  நன்றி செலுத்த கொடுக்கும் ஓசை பிரதமர் மோடிக்கே கேட்கவேண்டும் என்ற வகையில் பெரிய அண்டாவில் மூடி இரண்டை எடுத்துக் கொண்டு தெருவில் வைத்து அடிக்கிறார். மூதாட்டியின் இந்த செயலை கண்டு அனைவரும் வியந்தனர். ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

கொரோனா பாதிப்பில் உயிரிழந்தவர்கள் அதிகமானோர் வயதானவர்கள் என்பதால் அந்த கோபத்தை தான் பாட்டி இப்படி காட்டியுள்ளார் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

https://twitter.com/VijenderSinghR8/status/1241744256135380993

Categories

Tech |