அதிமுகவின் விருதுநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்த ராஜேந்திர பாலாஜி நீக்கப்பட்டது அவரின் ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மோடி எங்கள் டாடி, சின்னம்மா கட்சியில் இணைந்தால் நான் வரவேற்பேன். கமலஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும். தமிழகத்திலும் மதக்கலவரம் ஏற்படும். இப்படி பாஜகவின் கருத்துக்களை முழுமையாக ஆதரித்து பேசி வருபவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இவரின் பல கருத்துக்கள் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.
அதிமுகவின் விருதுநகர் மாவட்ட செயலாளராக இருந்துகொண்டு தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருந்துவந்த ராஜேந்திர பாலாஜியின் விருதுநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது.அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் இணைந்து வெளியிட்ட அறிக்கை அதிமுக நிர்வாகிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார் என்ற அறிவிப்பை அதிமுக தலைமை கழகம் வெளியிடப்பட்டுள்ளது. இது அவரின் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் தீவிர ரஜினி ஆதரவாளர் எனபதும் விவாதிக்கப்பட வேண்டிய ஒன்றாகவேஉள்ளது.