Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு – தமிழக அரசு அதிரடி உத்தரவு …!!

தமிழகத்தில் நாளை காலை வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பிரதமர் மோடி சுய ஊரடங்குக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து இன்று காலை 7 மணிமுதல் இரவு 9 மணி வரை மக்கள் தாமாக  முன்வந்து சுய ஊரடங்கில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் சுய ஊரடங்கு உத்தரவு நாளை காலை 5 மணி வரை நீட்டிக்கப்படுவதாக  தமிழக அரசு அறிவித்துள்ளது.இதற்கான அறிவிப்பை தமிழக அரசு செய்தி குறிப்பாக வெளியிட்டுள்ளது.

அதில் பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளுக்கிணங்க கொரோனா நோய் பரவலை தடுக்க இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் தாமாகவே முன்வந்து மேற்கண்ட ஊரடங்கு உத்தரவு மக்கள் ஒத்துழைப்புடன் இரவு 9 மணிக்கு நிறைவு பெற உள்ளது. இந்த நிலையில் மக்களின் நலன் கருதி நாளை காலை 23ஆம் தேதி காலை 5 மணி வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ள எந்த தடையும் இல்லை என்று தெரிவித்துள்ள தமிழக அரசு இந்த ஊரடங்கு உத்தரவு நாளை காலை 5 மணி வரை கடைபிடிக்க பொதுமக்கள் தங்களுடைய ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும்  தமிழகத்தில் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Categories

Tech |