சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் தோன்றி உலகையே கொலை நடுங்கச் செய்து வரும் கொரோனா வைரசின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது.
இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் சில நாடுகளில் கொரோனாவின் வேகம் மிகவும் தீவிரமாக இருக்கிறது.
இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 4 விழுக்காட்டினர் உயிரிழக்கிறார்கள். பெரும்பாலும் 60 வயதைக் கடந்தவர்கள் 15 விழுக்காட்டினர் உயிரிழக்கின்றனர்.
இது குறித்து WHO தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறுகையில், ” கோவிட்-19 இளைஞர்களை பல வாரங்கள் மருத்துவமனையில் இருக்கும் நிலைக்குத் தள்ளும், சில சமயங்களில் மரணம் கூட நிகழலாம்.
நீங்கள் இந்த வைரசால் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்றாலும் உங்களால் மற்றவர்களுக்கு குறிப்பாக பெரியவர்களுக்கும் பரவும் என்பதால் உங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள். இதன்மூலம் மற்றவர்களின் உயிரை இளைஞர்களாகிய நீங்கள் காப்பற்றலாம்” என்றார்.