Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : ”தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா” – அமைச்சர் உறுதி …!!

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதிப்படுத்தியுள்ளார்.

தமிழகத்தில் ஏற்கனவே மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. அதில் ஒரு நபருக்கு பாதிப்பு சரியாகிவிட்டது. காஞ்சிபுரத்தை சேர்ந்த அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு கண்காணிப்பில் இருக்கின்றார். அதைத் தொடர்ந்து கடந்த 2 தினங்களுக்கு முன்பாக ஒருவருக்கும், அதற்கு முன் தினம் ஒருவருக்கும் என இரு மூன்று பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இந்த சூழ்நிலையில் தற்போது அமைச்சர் விஜயபாஸ்கர் மேலும் 3 பேருக்கு இருக்கிறது என்ற தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த மூன்று பேரில் இரண்டு பேர் தாய்லாந்தில் இருந்து வந்தவர்கள், ஒருவர் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் முதல் கொரோனா உறுதி செய்யப்பட்டது ஓமன் நாட்டில் இருந்து வந்தவர். இரண்டாவது நபர் டெல்லியில் இருந்து வந்தது.மூன்றாவதாக வந்தவர் அயர்லாந்து நாட்டில் இருந்து வந்தவர். இப்பொழுது நான்கு ஐந்து ஆறு இந்த மூன்றில் இரண்டு பேர் தாய்லாந்தில் இருந்தும் , ஒருவர் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்தவராக இருக்கின்றார்.

இவர்கள் மூன்று பேருடைய உடல் நிலை என்பது சீராக இருக்கிறது என்றும் , 3 பேரும் அரசு மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்ட கூடிய கொரோனா சிகிச்சை வார்ட்டில் வைக்கப்பட்டு அவர்களின் உடல்நிலை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தற்போது வரைக்கும் தமிழகத்தில் 6 பேருக்கு கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |