வீட்டை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் கிடைக்கும் பயன்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம் .
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் உயிர்க்கொல்லி கொரோனோ வைரஸ் அச்சம் காரணமாக தற்போது பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே தஞ்சமடைந்துள்ளனர். தற்போது மக்கள் அதிகம் இருக்கக்கூடிய பகுதி என்றால் அது வீடுதான். வெளியில் சென்று வந்தவுடன் தமது கைகளை கழுவி ஆடைகளை உடனடியாக சலவைக்கு நனைய வைத்து சுத்தத்தை மேற்கொள்கிறோம்.
நாம் வீட்டை பராமரிப்பதில் மிகப்பெரிய தவறையும் செய்துவருகிறோம். அது என்னவென்றால், இதற்கு முன்போ அல்லது தற்போதோ வீட்டிற்கு தேவையற்ற பொருட்களை வாங்கி குவித்திருப்போம். அவை நமக்கு பயன்படவே செய்திருக்காது. இப்படி பொருட்கள் குவிந்து காணப்படுவதால் வீட்டை சுத்தமாக பராமரிப்பதில் சிரமம் ஏற்படும்.
எனவே வீட்டில் உள்ள தேவையற்ற பழைய பொருட்களை முடிந்த அளவுக்கு அகற்ற தொடங்குங்கள். இதன் மூலம் கிருமி தொற்றை நீக்கி வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளலாம். தொற்றுக்கிருமிகளிடம் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். பழையன கழிதல் என்பது தூய்மையைக் கடைப்பிடிக்க நமது முன்னோர்கள் நமக்கு சொல்லித்தந்த ஒரு பழமொழி ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.