Categories
மாநில செய்திகள்

சேலத்தில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி – அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறு வரும் நிலையில் சேலத்தில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் தகவல் அளித்துள்ள அவர், தமிழகத்தில் ஏற்கெனவே சென்னை, திருவாரூர், தேனி, திருநெல்வேலியில் கொரோனா பரிசோதனை மையம் இருக்கும் நிலையில், இப்போது சேலத்திலும் இந்தப் புதிய மையம் அமைய உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதுவரை தமிழகத்தில் 4 மையங்கள் செயல்பட்டு வந்த நிலையில் 5வதாக இம்மையம் சேலம் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் செயல்பட உள்ளது என்று விளக்கம் அளித்துள்ளார். எனவே பொதுமக்கள் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தால் இங்கு வந்து பரிசோதனை எடுத்துக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளார்.

மேலும் தற்போது வரை 1,98,741 பயணிகளுக்கு ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும், 4,253 பேர் ஆய்வில் உள்ளதாகவும், தனிமை வார்டுகளில் 1120 படுகைகள் தயார் நிலையில் உள்ளது. தற்போது புதிதாக 32 பேர் கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 333 ரத்த மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதில் 3 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. 303 பேருக்கு நெகடிவ் முடிவு வந்துள்ளது, 27 ரத்த மாதிரிகள் ஆய்வில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் மாண்புமிகு பிரதமர், விரைவில் முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார் என்றும்குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |