இரண்டு முள்ளங்கி, நாலு முட்டை இருந்தா பத்து நிமிடத்தில் அருமையான ருசி மிகுந்த சாதம் ரெடி..!
தேவையான பொருட்கள்:
எண்ணெய் – 4 டீஸ்பூன்
சீரகம் – கால் ஸ்பூன்
முள்ளங்கி – 2
பச்சைமிளகாய் – 2
பூண்டு – 4 பல்
பெரிய வெங்காயம் – 1
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
வத்தல் பொடி – அரை ஸ்பூன்
மிளகுத்தூள் – கால் ஸ்பூன்
சாதம் – ஒரு கப்
கேரட் – 1
செய்முறை :
முதலில் பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் , அதில் உடைத்து வைத்திருக்கும் முட்டையை ஊற்றி நன்றாக கிளறி பொரித்து, ஒரு தட்டில் எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதே வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கால் ஸ்பூன் சீரகம் சேர்த்து பொரிய விடுங்கள். பின்னர் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்றாக வதக்குங்கள்.
பின் நறுக்கிய வெங்காயத்தை கொட்டி கருவேப்பிலை சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும், முள்ளங்கியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கவேண்டும். அதையும் இதோடு சேர்த்து நன்றாக கிளறி விடுங்கள், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். மஞ்சள்பொடி, வத்தல் பொடி, மிளகு பொடி சேர்த்து நன்றாக கிளறி விடுங்கள். பத்து நிமிடம் முள்ளங்கி வேகும் வரை கிளறி விட்டு கொள்ளுங்கள்.
பின்னர் இதோடு நாம் பொரித்து வைத்திருக்கும் முட்டையை சேர்த்து நன்றாக கிளறி, இதற்கு தேவையான அளவிற்கு வெள்ளை சாதத்தை சேர்த்து நன்றாக மசாலா சாதத்தில் ஒன்று சேரும்படி கிளறி இறக்குங்கள். இப்பொழுது ருசியான எளிமையான மதிய உணவிற்கு முள்ளங்கி முட்டை சாதம் ரெடி..!