Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : வெளிநாட்டு விமானங்கள் இந்தியா வர தடை …!!

இந்தியாவில் வெளிநாட்டில் இருந்து எந்த விமானமும் வரக்கூடாது என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் ஏற்கனவே வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வருபவர்களை தடுப்பதற்காக விசாக்கள் ரத்து செய்யப்பட்டு இருந்தது. புதிதாக வெளிநாட்டினர் யாருக்கும் விசாக்கள் வழங்கப்படுவதில்லை.மேலும் கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக மார்ச் 22ஆம் தேதி முதல் ஒரு வாரத்துக்கு இந்தியாவில் எந்த நாட்டில் இருந்தும் விமானங்கள் வராத அளவுக்கு புதிய உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.

இதனால் வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்கள் கூட 22ஆம் தேதிக்கு பிறகு இந்தியாவுக்கு வர முடியாது. அந்த ஒரு வார கால கட்டத்தில் சிங்கப்பூர் போன்ற இடங்களில் இருந்தாலோ, துபாய்-கோலாலம்பூர் ஆகிய இடத்தில் இருந்தோ இந்தியாவிற்கு சர்வதேச விமானம் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பல்வேறு நாடுகளில் இதே போல நடவடிக்கை எடுத்து விட்டன. அமெரிக்கா, கனடா தங்கள் நாட்டின் எல்லையை முற்றிலும்அடைத்து விட்டனர். சவுதி அரேபியாவிற்கு எந்த நாட்டு விமானங்களும் தரை இறங்க கூடாது என தடை உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோன்ற ஒரு நிலைப்பாட்டை தான்  இந்தியாவும் எடுத்துள்ளது.

அதே போல மாநில அரசுகளுக்கு சில அறிவுரைகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 10 வயதுக்கு குறைவான குழந்தைகள் , சிறுவர்கள் ஆகியோர் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுரை அளிக்கப்பட்டு இருக்கிறது.

Categories

Tech |