சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,000 க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது.
கொரானாவால் வெளிநாடுகளில் சிக்கிக் கொண்டுள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள் பலருக்கும் இப்போது தான் தாய்நாட்டின் அருமை புரிகிறது இந்தியாவில் இருந்திருந்தால் பாதுகாப்பாக இருக்கும் என்று கூறுகின்றனர்.
பிரித்தானியா உட்பட சில நாடுகளில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (Overseas Citizens of India card holders) OCI அட்டை வைத்திருப்பவர்கள் இந்தியா திரும்ப தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் இருந்திருந்தால் ஆவாது பாதுகாப்பாக இருந்திருக்குமே என்கிறார்கள்.
பிரித்தானியாவில் இருந்து திரும்பிய பலரும் இந்தியாவை புகழ்ந்து தள்ளுகின்றனறாம். மேலும் பிரித்தானியாவை பற்றி கூறுகையில் அந்நாட்டில் கொரானாவின் பாதிப்பு இன்னும் மோசமாகும் என்றும் பரவலைத் தடுக்க எதுவும் செய்யவில்லை என்கிறார்கள்.
மேலும் இந்தியாவுக்கு திரும்பி அவர்கள் இந்தியாவில் குறைந்த செலவில் சிகிச்சை பெறலாம் அதுமட்டுமின்றி குடும்பத்தினரிடம் இருக்கலாம் என்பது போல் உணருகிறார்கள்.
நடமாடும் மருத்துவ உபகரணங்களுடன் இந்திய விமானப்படை ஈரானுக்கு பறந்து சென்று அங்கிருந்த இந்தியர்களுக்கு பரிசோதனை செய்தது என்று இந்தியாவை புகழ்ந்து தள்ளுகின்றனர்.