Categories
தேசிய செய்திகள்

பொது இடத்தில் “தும்மியவருக்கு” காத்திருந்த அதிர்ச்சி!;- கொந்தளித்த சமூக ஆர்வலர்கள்.!!

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,000 க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலும் வைரசால் 166பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இதையடுத்து இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

கொரானாவிற்கு  இந்தியாவில் 3 பேர் பலியாகியுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவன் எண்ணிக்கை 171 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா  மாநிலத்தில் 47 பாதிக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் கோலாலம்பூரில் பொது இடத்தில் வாயை மூடாமல் தும்மிய நபரை அங்கே  கூடியிருந்த மக்கள்  தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாக்கப்பட்ட நபருக்கு சாதாரண தும்மல் இருந்த போதிலும் இவ்வாறு தாக்குதல் நடத்தியதுக்கு  பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சமயத்தில் நாம் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

Categories

Tech |