தமிழகத்தில் அஞ்சல் சரகத்தின் சார்பாக வருகின்ற ஜனவரி 27ஆம் தேதி அஞ்சல் குறை கேட்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா சாலையில் உள்ள முதன்மை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் ஜனவரி 27ஆம் தேதி காலை 11 மணிக்கு அஞ்சல் குறை கேட்பு முகாம் நடைபெறும். மக்கள் தங்கள் குறைகளை அஞ்சல் குறை கேட்டு மன்றத்தின் தலைவரான, தமிழ்நாடு சரக முதன்மை தலைமை அஞ்சல் அதிகாரியிடம் நேரடியாக அல்லது எம் விஜயலட்சுமி, உதவி இயக்குனர், முதன்மை தலைமை அஞ்சல் அதிகாரி அலுவலகம், சென்னை 600002 என்ற முகவரிக்கு ஜனவரி 16ஆம் தேதிக்குள் அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories
தமிழகத்தில் ஜனவரி 27ஆம் தேதி அஞ்சல் குறைகேட்பு முகாம்…. வெளியான அறிவிப்பு….!!!!
