கரூர் மாவட்டத்தில் உள்ள அத்திகுளம் பகுதியில் அக்பர் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் அக்பரும் தையல்காரரான சந்திரசேகர் என்பவரும் நண்பர்களாக பழகி வந்தனர். கடந்த 25-ஆம் தேதி இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது சந்திரசேகர் அக்பரின் மனைவி சைனம்பூவை தவறாக பேசியதாக தெரிகிறது. இதனை அக்பர் தட்டி கேட்டபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த சந்திரசேகர் அக்பரை தகாத வார்த்தைகள் திட்டி தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த அக்பர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சந்திர சேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Categories
மனைவியை தவறாக பேசிய நபர்…. பெயிண்டர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை….!!!
