Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்!… இனி சிலிண்டர் வேண்டாமா?… வரப்போகுது சூரிய ஒளி சமையல் அடுப்பு?…. இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்….!!!!

LPG எரிவாயுவை பயன்படுத்துவதற்கு மாற்றாக “சூர்ய நூதன்” எனும் சூரிய ஒளியால் இயங்கும் அடுப்பை இந்திய ஆயில், பெட்ரோலியம் மற்றும் இயற்கு எரிவாயு அமைச்சகம் வடிவமைத்து உள்ளது. சூர்ய நூதன் ரீசார்ஜ் செய்யக்கூடிய வீட்டின் உட் புறத்தில் பயன்படுத்தக்கூடிய சூரிய ஒளி சமையல் அடுப்பு ஆகும். இது பரிதாபாத்திலுள்ள இந்தியன் ஆயிலின் ஆர்&டி மையத்தால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது.

அத்துடன் இதற்கு காப்புரிமையும் பெறப்பட்டது. இந்த சூர்ய நூதன் அடுப்பு 3 வித மாடல்களில் விற்பனைக்கு வரயிருக்கிறது. பேஸிக் மாடல் ரூபாய். 12 ஆயிரத்துக்கும், டாப் மாடல் ரூபாய். 23 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது இந்தியன் ஆயில் பெட்ரோல்-டீசல் நிலையங்களிலும் விற்பனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இது விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது. இதன் விலை கொஞ்சம் அதிகம் என்றாலும் கூட, கேஸ் சிலிண்டர் விலையை ஒப்பிட்டால் ஒரு முறை வாங்கி தொடர் சேமிப்பை பெறலாம்.

Categories

Tech |