Categories
தேசிய செய்திகள்

பொங்கலுக்குள் குடும்ப தலைவிக்கு ரூ.1,000….. முதல்வர் அதிரடி அறிவிப்பு…..!!!!

புதுச்சேரியில் பொங்கல் பண்டிகைக்குள் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் அறிவித்ததை கொடுக்க உள்ளதாக முதல்வர் ரங்கசாமி உறுதியளித்துள்ளார். அதன்படி பொங்கல் பண்டிகைக்குள் அரசின் எந்த உதவி தொகையும் பெறாத குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.

மேலும் பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு 34 ரூபாயிலிருந்து 37 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி மற்றும் சைக்கிள் விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அரிசிக்கான நான்கு மாத பணம் மஞ்சள் அட்டைதாரர்களுக்கு 1200 ரூபாயும், சிவப்பு அட்டைதாரர்களுக்கு 2400 உடனடியாக செலுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |