2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று சட்டப்பேரவை மீண்டும் கூடிய நிலையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டு வருகிறார்.
அதன்படி விருத்தாசலத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தை தரம் உயர்த்தி நடைபயிற்சி பாதை மற்றும் கழிவறை வசதிகள் ஏற்படுத்த பரிசீலிக்கப்படும் ஏற்று அவர் கூறியுள்ளார். மேலும் மெரினா கடற்கரையில் மாரத்தான் போட்டிகளை நடத்த முதல்வருடன் ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பட்டினப்பாக்கத்தில் மாரத்தான் போட்டிகள் நடத்த அரசு ஏற்பாடு செய்து வருகிறது என்றும் அவர் அறிவித்துள்ளார்.