Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. பொங்கல் பரிசு ரூ.1000 பெற இது கட்டாயம்…. அரசு புதிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது அனைத்து தரப்பு மக்களும் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட அரசு தரப்பில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் இந்த வருடம் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவச வேட்டி சேலைகள் வழங்கப்படும் எனவும் ஆயிரம் ரூபாய் ரொக்கம்,ஒரு கிலோ பச்சரிசி மற்றும் ஒரு கிலோ சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. அது மட்டுமல்லாமல் இதனுடன் சேர்த்து கரும்பு வழங்கப்படும் எனவும் நேற்று அறிவிப்பு வெளியானது. இதனால் ரேஷன் அட்டைதாரர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளன.

இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன்கள் வருகின்ற டிசம்பர் 30, 31 மற்றும் ஜனவரி 2,3,4 ஆகிய தேதிகளில் விநியோகம் செய்யப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. மேலும் முறைகேடுகளை தடுக்கும் விதமாக குடும்ப உறுப்பினர்கள் கைரேகை வைத்தால் மட்டுமே ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். கைரேகை இணைக்கப்படவில்லை என்றால் யாருடைய கைரேகை இணைக்கப்பட்டுள்ளதோ அவர்கள் மட்டுமே பொங்கல் பரிசு தொகை பெற முடியும் என அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |