கொரோனா வைரஸ் குறித்த வதந்தி பரப்பியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. தங்களை தற்காத்துக்கொள்ள அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. வருகின்ற 31ம் தேதி வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுப்பு என்றும் , மால்கள் , பெரிய பெரிய வணிக வளாகங்கள் , திரையரங்குகள் மூட அறிவித்தும் , மக்களை அதிகமாக ஒரு இடங்களில் கூட வேண்டாம் என்று வலியுறுத்தியும் பல்வேறு நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் கொரோனா வைரஸோடு , அது குறித்த வதந்தியும் கடுமையாகவே பரப்பப்பட்டு வந்தது. இதை கட்டுப்படுத்தும் வகையில் கொரோனா குறித்து வதந்தி பரப்பும் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசும் , மாநில அரசும் எச்சரிக்கை விடுத்த நிலையில் மதுரையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சமூக வலைதளங்களில் கொரோனா குறித்த வதந்தி பரப்பிய செல்வம் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.