Categories
தேசிய செய்திகள்

பூஸ்டர் டோஸ் போட்டவர்களுக்கு “இது தேவையில்லை”…. வெளியான மிக முக்கிய தகவல்…!!!

மீண்டும் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில்  தடுப்பூசி பணிக்குழு தலைவர் என்.கே. அரோரா பூஸ்டர் டோஸ் எடுப்பது குறித்து முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது பூஸ்டர் டோஸ் பெற்றவர்கள் நாசி தடுப்பூசியைப் பெற வேண்டாம் என்றும், நாசி தடுப்பூசியில் ‘ஆன்டிஜென் சிங்க்’ இருப்பதாகவும், ஒரு குறிப்பிட்ட வகை ஆன்டிஜெனை மீண்டும் மீண்டும் உடலில் செலுத்தினால், உடல் எதிர்வினை செய்யாது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் பூஸ்டர் டோஸ் போடாதவர்கள் மூக்கில் தடுப்பூசி போடலாம் என்று கூறப்படுகிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் நாசி தடுப்பூசியை, மூக்கில் 4 சொட்டு என மொத்தம் 0.5 மில்லி அளவு தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

Categories

Tech |