Categories
மாநில செய்திகள்

திடீரென பொறுப்பிலிருந்து விலகும் உதயநிதி ஸ்டாலின்?… இனி அவருக்கு பதில் இவர்…. வெளியான தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வந்த உதயநிதி, சமீபத்தில் அரசியலிலும் களமிறங்கினார். அதன் வெற்றியாக சென்னை சேப்பாக்கம் தொகுதியில் இவர் வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து இளைஞர் அணி தலைவராகவும் இருந்து வந்த இவருக்கு சமீபத்தில் விளையாட்டு துறை அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டது. அதனால் இனி படங்களில் நடிக்கப் போவதில்லை என இவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ரெட் ஜெயன்ட் நிறுவன பொறுப்பில் இருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விலகுகிறார் என தகவல் வெளியாகி உள்ளது. எம்எல்ஏவாக இருந்து அமைச்சராக பொறுப்பேற்றதால் மாமன்னன் திரைப்படமே கடைசி இனி நடிக்கப் போவதில்லை என்றார். அதைப்போல இனி ரெட் ஜெயன்ட் வெளியீடுகளில் உதயநிதி பெயருக்கு பதில் அவரது மனைவி கிருத்திகா உதயநிதி பெயர் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது. விரைவில் இந்த மாற்றம் நிகழும் எனவும் தெரிகிறது.

Categories

Tech |