நெருக்கமான காட்சிகளின் போது சினிமாவில் ஆண்கள் அதிகம் சங்கடப்படுவதாக நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மராத்தி போன்ற மொழிகளில் பல முன்னணி ஹீரோகளுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் மலையாளத் திரையுலகிலும் ஒரு புதிய படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார். இவருடைய நடிப்பில் சமீபத்தில் பப்ளி பவுன்சர் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இப்படத்தை மதுர் பண்டர்க்கார் இயக்க, சாகில் வைத், அபிஷேக் பஜாஜ், ஆராதனா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.
இதுகுறித்து, நடிகர்களும் சாதாரண மனிதர்கள்தான் என்பதை புரிந்துகொண்டாலே போதும். இதில் ஆண், பெண் என்ற வேறுபாடு எதற்கு. பெண்களைவிட ஆண்களே நெருக்கமான காட்சிகளில் கஷ்டப்படுகிறார்கள். நடிகைகள் என்ன நினைத்துவிடுவார்களோ என்று கவலைப்படுகிறார்கள் என்று பேசியுள்ளார்.