Categories
மாநில செய்திகள்

பிரசித்தி பெற்ற பழனியில் தைப்பூச திருவிழா முன்னேற்பாடு…. ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தீவிரம்….!!!!

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் ஒன்றாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவில் இருக்கிறது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக செல்வார்கள். அதன் பிறகு ஜனவரி மாதம் பழனி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க இருக்கிறது. அதற்கு முன்னதாக கும்பாபிஷேக விழாவும் நடைபெற இருக்கிறது. இதனால் தற்போது இருந்தே பழனி முருகனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு செல்கிறார்கள்.

இந்நிலையில் தைப்பூச திருவிழாவில் செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து வருவாய் கோட்டாட்சியர் சிவகுமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தின் போது பாதயாத்திரை ஆக வரும் பக்தர்களின் நலன் கருதி சாலைகளில் தடுப்பு சுவர்கள் அமைத்தல், ஒளிரும் ஸ்டிக்கர்கள் வைத்தல், எச்சரிக்கை அறிவிப்பு பலகை, தற்காலிக ஓய்விடங்கள், சாலை பணிகளை விரைவாக முடித்தல், வாகனங்களை மெதுவாக செல்ல அறிவுறுத்தல் போன்ற பல முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் பக்தர்களின் வசதிக்காக பழனி நகராட்சி பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Categories

Tech |