மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, “தற்போது சீனா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. அதேபோல் நமது நாட்டிலும் தொற்று ஏற்படாமல் இருப்பதற்காக மத்திய,மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த2 ஆண்டுகள் தடைப்பட்டிருந்த புத்தாண்டு கொண்டாட்டத்தை இந்த ஆண்டு மிகுந்த உற்சாகத்துடன் நடத்த நட்சத்திர உணவகங்கள் தயாராகி வருகிறது. இந்நிலையில் சனிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை நடைபெறும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் எந்தவித அசம்பாவிதங்களும் நடக்காமல் இருப்பதற்காக காவல்துறையினர் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
எனவே புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மக்கள் கட்டாயமாக முழு கவசம் அணிந்திருக்க வேண்டும். மேலும் சீனாவில் இருந்து மதுரைக்கு வந்துள்ள 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.