Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசுகளுக்கு உதவ குழு அமைத்தது உள்துறை அமைச்சகம்!

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது.

இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை6,0000க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலும் வைரசால் 137பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டோரில் 113 பேர் இந்தியர்கள், 24 பேர் வெளிநாட்டினர்கள் ஆவர். இதையடுத்து இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்த வருகின்றன. நாடு முழுவதும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசுகளுக்கு உதவுவதற்காக உள்துறை அமைச்சகம் குழு அமைத்துள்ளது. இணைச் செயலாளர்கள் அந்தஸ்தில் 30 அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்துள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

Categories

Tech |