Categories
தேசிய செய்திகள்

EPFO சந்தாதாரர்கள் கவனத்திற்கு…. ஓய்வூதிய விதிகளில் மாற்றம்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

பணியாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பானது (EPFO) ஓய்வூதிய திட்டத்தில் பெரிய மாற்றத்தை செய்திருக்கிறது. இவை கோடிக்கணக்கான சந்தாதாரர்களுக்கு நிவாரணம் அளிக்கும் அடிப்படையில் இருக்கும். இதுகுறித்து பிடிஐ செய்தியின் அடிப்படையில், தொழிலாளர் அமைச்சகத்தின் அறிக்கை வாயிலாக இந்த தகவல் பகிரப்பட்டுள்ளது.

மத்திய அறங்காவலர் குழு அரசுக்கு அளித்த பரிந்துரையில் 6 மாதங்களுக்கும் குறைவான சேவைக்காலம் உள்ள உறுப்பினர்களுக்கு அவர்களின் இபிஎஸ் கணக்கில் இருந்து பணம் எடுக்கும் வசதி இருக்கிறது என்று கூறப்பட்டது. நாட்டில் மொத்தம் 65 மில்லியனுக்கும் மேற்பட்ட EPFO-ன் சந்தாதாரர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 34 வருடங்களுக்கு மேல் இத்திட்டத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களுக்கு விகிதாச்சார ஓய்வூதிய பலன்களை வழங்கவும் அறங்காவலர் குழு பரிந்துரை செய்திருக்கிறது. இவ்வசதி ஓய்வூதியம் பெறுவோர் ஓய்வூதிய பலனை நிர்ணயிக்கும் சமயத்தில் அதிக ஓய்வூதியம் பெற உதவும். இந்த பெரிய முடிவுக்கு பின், தற்போது அந்த சந்தாதாரர்களுக்கு ஒரு பெரிய நிவாரணம் கிடைக்கும். மொத்த சேவை இன்னும் 6 மாதங்கள் உள்ள ஊழியர்களும் இனிமேல் டெபாசிட் செய்த தொகையை எடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |