Categories
சினிமா தமிழ் சினிமா

புலி வாலை பிடித்து சர்ச்சையில் மாட்டி கொண்ட சந்தானம்…. அடுத்தடுத்து கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்…..!!!!

பிரபல கன்னட டைரக்டர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள படம் “கிக்”. இப்படத்தில் தன்யா போப், ராகினி திரிவேதி, கோவை சரளா உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். இந்த படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி வைரலாகியது. அதன்பின் சந்தானம் மீண்டுமாக திரில்லர் படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் சந்தானம் புலி உடன் விளையாடும் வீடியோவை தன் இணையதளப் பக்கத்தில் பகிர்ந்து, “இதன் பெயர்தான் புலி வாலை பிடிக்கிறதா” என குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோவை இணையதளப்பக்கத்தில் வெளியிட்ட சந்தானம், தற்போது சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். ஏனெனில் வீடியோவில் அந்த உறங்கும் புலியின் தலையில் அதன் பயிற்சியாளர் ஒருவர் சிறிய தடியால் தட்டுகிறார். அப்போது புலியும் சற்று உறுமியவாறு எழுந்து பிறகு மீண்டும் அமைதியாக உறங்குகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் இப்படி வன விலங்குகளை துன்புறுத்துவதை சந்தானம் ஆதரிக்கிறாரா..? ஒருவர் புலியை தடியால் தாக்கும்போது அது தொடர்பாக சந்தானம் தன் எதிர்ப்பை ஏன் தெரிவிக்கவில்லை என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Categories

Tech |