Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி!… ஒரு தலைமையாசிரியர் இப்படியா நடந்துக்கணும்?… படிக்க சென்ற சிறுமிக்கு நேர்ந்த துயரம்…. பரபரப்பு சம்பவம்….!!!!

சத்தீஸ்கர் மாநிலம் சராங்கர்-பிலாய்கர் மாவட்டத்திலுள்ள சரியா எனும் கிராமத்தில் இயங்கி வரும் அரசு பள்ளியில் கஜேந்திர பிரசாத் என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் அப்பள்ளியில் படிக்கும் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து உள்ளார். இதுகுறித்து சிறுமி அவரது உறவினர்களிடம் தெரிவித்ததை அடுத்து தலைமை ஆசிரியரை கிராமத்தினர் கடுமையாக தாக்கி இருக்கின்றனர். இது தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தது வந்து, பள்ளியில் பதுங்கி இருந்த தலைமையாசிரியரை மீட்டு காவல்துறை வாகனத்துக்குள் அமரவைத்துள்ளனர்.

எனினும் கோபம் அடங்காத கிராமத்தினர், வாகனத்துக்குள் இருந்த தலைமை ஆசிரியரை காவல்துறையினரை மீறி தாக்கியுள்ளனர். அதனை தொடர்ந்து நள்ளிரவு 12 மணி அளவில் தலைமை ஆசிரியரை பொதுமக்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதன்பின் தலைமையாசிரியர் கஜேந்திர பிரசாத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு படிக்க சென்ற சிறுமிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது..

Categories

Tech |