சட்டப்பேரவையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து திமுக தலைவர்மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் பேசினார். அதில், கொரோனா நோயிலிருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதில், பாராட்டக்கூடிய விஷயம் என்னவென்றால், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தது நல்ல விஷயம்.
இதேபோன்று தொடர்ந்து தமிழக அரசு செயல்பட வேண்டும். பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தது போல் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற தேவையான நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொள்ள வேண்டும். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று அவர் தெரிவித்தார். மேலும் இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் நன்றாக இருந்தது மேற்கண்ட கோரிக்கையை நிறைவேற்றினால் மேலும் சிறப்பாக இருக்கும் என்று தெரிவித்தார்.